ஒன்றாகச் செயல்படுவதன் மூலம், அனைவரும் உள்ளடக்கப்பட்டதாக உணரும் வகையில், சிறந்த, பாதுகாப்பான விக்டோரியாவை உருவாக்க முடியும்.
இனவாதம் என்றால் என்ன?
இனவாதம் என்பது மக்கள் தங்கள் இனம் அல்லது இனக்குழு காரணமாக நியாயமற்ற முறையில் நடத்தப்படும் பாகுபாட்டின் ஒரு வடிவமாகும். இது வாய்மொழி அவமதிப்பு, ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்தலை அல்லது மற்றவர்களுக்குச் சமமான அணுகலை அல்லது வாய்ப்புகளை வழங்காமல் இருப்பதை உள்ளடக்கலாம்.
இனவாதம் பல வழிகளில் வெளிப்படலாம். இந்த உத்தி பின்வருவனவற்றில் உள்ள இனவாதத்தை எதிர்கொள்ள முனைகிறது:
- சமூகம்
- அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள்
- சட்டங்கள், கொள்கைகள் மற்றும் அமைப்பு முறைமைகள்.
எங்கள் கண்ணோட்டம்
அனைத்து விக்டோரியர்களும் சம உரிமை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை அனுபவிக்கின்ற, மேலும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் ஆதரவான சமூகங்களில் செழித்து வளர்கின்ற இனவாதம் மற்றும் பாகுபாடு இல்லாத ஒரு விக்டோரியா.
விக்டோரியாவில் இனவாதம் மற்றும் பாகுபாட்டைக் குறைப்பதற்கான உத்தி 4 இலக்குகளைக் கொண்டுள்ளது:
- இலக்கு 1: இனவாத மனப்பான்மை, நடத்தைகள் மற்றும் நம்பிக்கைகள் அடையாளம் காணப்படுகின்றன, சவால் விடுக்கப்படுகின்றன மற்றும் நிராகரிக்கப்படுகின்றன.
- இலக்கு 2: அரசாங்கச் சேவைகள் மற்றும் பணியிடங்கள் பாதுகாப்பானவை, அணுகக்கூடியவை மற்றும் பாரபட்சமற்றவை.
- இலக்கு 3: அனைத்து துறைகளிலும், பங்கேற்பு, முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் வெற்றிக்கு இனிமேலும் இனவாதம் மற்றும் பாகுபாடு தடையாக இருக்காது.
- இலக்கு 4: இனவாதத்திற்கு ஆளானவர்கள் பொருத்தமான மற்றும் கலாச்சார ரீதியாக பாதுகாப்பான சேவைகள் மற்றும் ஆதரவைப் பெறுகிறார்கள்.
நோக்கத்தை நிறைவேற்றுதல்
இனவாத எதிர்ப்பு உத்தி பின்வருவனவற்றைச் செயல்படுத்தும்:
- சமூகம்சார் விளையாட்டு நிகழ்வுகளில் இனவாதத்தை வெற்றிகொள்ள மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல்
- உள்ளூர் மட்டத்தில் இனவாதத்துக்குச் சவால் விடும் சமூகம் வழிநடத்தும் நடவடிக்கைக்கு ஆதரவளித்தல்
- வெறுப்புப் பேச்சு மற்றும் நடத்தைக்கு எதிராக பாதுகாப்பையும் சட்டங்களையும் வலுப்படுத்துதல்
- முறையீடுகளை மேற்பார்வையிடும் நிறுவனங்கள் இனவாதம் தொடர்பான புகார்களுக்குப் எதிர்வினையாற்றும் விதத்தை மேம்படுத்துதல்
- சட்ட அமலாக்கத்தில் இனவாதத்தையும் பாகுபாட்டையும் குறைத்தல்
- வேலை வழங்குநர்களும் நிறுவனங்களும் இனவாதத்தைத் தடுக்கின்ற மற்றும் பதில்வினையாற்றுகின்ற விதத்தை மேம்படுத்துதல்
- இனவாதத்தை எதிர்கொண்ட மக்களுக்கான உள்ளூர் இனவாத எதிர்ப்பு ஆதரவு வலையமைப்புகளை ஆதரித்தல்.
இனைவாதத்தைக் குறைப்பதற்கான உத்தியின் தாக்கத்தை நாங்கள் அளவிடுவோம் அத்துடன் எங்கள் முன்னேற்றம் குறித்து சமூகத்திற்குத் தெரிவிப்போம்.
நமக்கு ஏன் இந்த உத்தி தேவை
நாம் பலவிதமானவர்கள்
- விக்டோரியர்களில் 30% பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள்
- ஆஸ்திரேலியாவின் முதல் மக்களில் 8% பேர் விக்டோரியாவில் வாழ்கின்றனர்
- விக்டோரியர்கள் 300 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மரபுவழியைச் சேர்ந்தவர்கள், 290 மொழிகள் பேசுகிறார்கள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்டுள்ளார்கள், கிட்டத்தட்ட 200 வெவ்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள்
இனவாதம் இன்னும் ஒரு பிரச்சனையாக உள்ளது
- 2022 இல், 5 இல் 3 (60%) ஆஸ்திரேலியாவில் இனவாதத்தை அனுபவிப்பதாகத் தெரிவித்தார்கள்
- 2023ஆம் ஆண்டில், 5 இல் 1 நபர் (18%) ஆஸ்திரேலியாவில் இனவாதத்தை அனுபவிப்பதாகத் தெரிவித்தார்கள்.
- 5 ஆஸ்திரேலியர்களில் 3 பேர் (63%) ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது மத்திய கிழக்கு அல்லது கிறித்துவம் தவிர்த்த வேறு மதத்தைச் சேர்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குடியேற்றக் குழுக்கள் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர்.
- 5 ஆஸ்திரேலியர்களில் 3 பேர் (62%) இனவாதத்தை 'மிகப் பெரிய' அல்லது 'ஓரளவு பெரிய' பிரச்சனையாகப் பார்க்கின்றனர்
தகவல் இல்லாமை மற்றும் சேவைகளில் சமூக நம்பிக்கை இல்லாமை ஆகியவை இனவாதம் குறித்துக் குறைவாக புகாரளிக்கப்படுவதைக் குறிக்கும்.
நாம் யாரிடம் பேசினோம்
முதல் மக்கள், பல்கலாச்சார மற்றும் பல நம்பிக்கைகளைக் கொண்ட சமூகங்களில் இருந்து 670க்கும் மேற்பட்ட விக்டோரியர்கள் கூறுவதைச் செவிமடுத்தோம். இவர்களில் சமூகத் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் முன்னரங்கப் பணியாளர்கள் அடங்குவர்.
விக்டோரியாவில் இனவாதம் குறித்துப் புகாரளித்தல்
இனவாதத்தை எவரும் சகித்துக் கொள்ளக் கூடாது. விக்டோரியாவில் இனவாதம் அல்லது பாகுபாடுகளை நீங்கள் எதிர்கொண்டால் அல்லது எவரேனும் எதிர்கொள்வதைக் கண்டால், அது குறித்துப் புகாரளிக்கலாம்.
விக்டோரியா சம வாய்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்
வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 1300 292 153 எனும் எண்ணை அழைக்கவும். உங்களுக்கு இலவச மொழிபெயர்த்துரைப்பாளர் தேவைப்பட்டால், 1300 152 494 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
மின்னஞ்சல் enquiries@veohrc.vic.gov.au
இணையவழியில் முறைசாராப் புகார் ஒன்றை மேற்கொள்ள.
நீங்கள் செவிப்புலன் அற்றவராக/அற்றோர் சமுகத்தவராக, செவிப்புலன் அல்லது பேச்சுக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், தேசிய மீழ்பரிமாற்ற சேவையைத் தொடர்புகொள்ளவும்.
விக்டோரியா காவல்துறை
அவசரநிலைகளுக்கு, நடந்துகொண்டிருக்கும் குற்றத்தைப் புகாரளிக்க அல்லது உடனடியாக காவல்துறை வருகைக்காக, டிரிபிள் ஜீரோவை (000) அழைக்கவும்.
அவசரநிலை அல்லாதவற்றுக்கு, 131 444 என்ற எண்ணில் காவல்துறை உதவி எண்ணை அழைக்கவும் அல்லது இலவச மொழிபெயர்த்துரைப்பாளருக்காக 131 450 ஐ அழைக்கவும்.
உங்கள் உள்ளூர் காவல் நிலையத்திலோ அல்லது இணையவழியிலோ புகார் செய்யலாம்.
1800 333 000 என்ற எண்ணில் Crime Stoppers க்குப் பெயரடையாளம் குறிப்பிடாமல் புகாரளிக்கலாம்.
மேலும் ஆதரவு மற்றும் புகாரளித்தல் விருப்பத் தேர்வுகளுக்கு, விக்டோரியாவின் இனவாத எதிர்ப்பு உத்தியைப் பார்வையிடவும்.
மேலும் தகவல்கள்
முழு உத்தியையும் ஆங்கிலத்தில் அல்லது இந்தச் சுருக்கத்தைப் பிற மொழிகளில் இணையத்தில் காணலாம்.
நீங்கள் மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை தொடர்புகொள்ள (TIS) 131 450 ஐ அழைக்கலாம் அத்துடன் மேலும் தகவலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சரவைத் துறையைத் (Department of Premier and Cabinet) தொடர்புகொள்ள 03 9651 5111 ஐ அழைக்கலாம்.
முதல்வர் மற்றும் அமைச்சரவைத் துறைக்கு, நீங்கள் antiracism.strategy@dpc.vic.gov.au எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
Updated