நீங்கள் ஓர் அகதியர் அல்லது புகலிடம் வேண்டுவோர் பின்புலத்தில் இருந்து வருபவராக இருந்தால், நீங்கள் முன்கூட்டிய ஆரம்ப மழலையர் பள்ளிக்குத் (ESK) தகுதி பெறலாம். உங்கள் குழந்தைக்கு ஒவ்வொரு வாரமும் அதிகபட்ச இலவச மழலையர் திட்ட நேரங்களை நீங்கள் பெறுவதை உறுதிசெய்ய, முன்கூட்டிய ஆரம்ப மழலையர் பள்ளி (ESK) உதவும்.
2023 ஆம் ஆண்டில், மூன்று வயதினருக்கான மழலையர் திட்டங்கள் ஒவ்வொரு வாரமும் 5 முதல் 15 மணிநேரம் வரை இருக்கும், மற்றும் நான்கு வயதினருக்கான மழலையர் திட்டங்கள் 15 மணிநேரம் இருக்கும். முன்கூட்டிய ஆரம்ப மழலையர் பள்ளியின் (ESK) மூலம் பதிவுசெய்வதனால், மூன்று வயது மற்றும் நான்கு வயது குழந்தைகளுக்கான திட்டங்களில் ஒரு வாரத்தில் முழு 15 மணிநேரத்திற்கு அது உத்தரவாதம் அளிக்கிறது. இது பின்வரும் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது:
- அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர் பின்னணியில் இருந்து வந்தவர்கள்
- பழங்குடியினர் மற்றும்/அல்லது டோரஸ் நீரிணைத் தீவுவாசி என அடையாளம் காணப்பட்டவர்கள்
- குழந்தைப் பாதுகாப்புடன் தொடர்புடைய குடும்பத்தினர்
விக்டோரியாவில் எங்கு வசிக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அறிமுகப்படுத்தும் காலத்தில் இக்குழந்தைகள் வாரத்திற்கு 15 மணிநேரங்களும் இலவச குழந்தைகள் அமைப்பை அணுகலாம். அவர்களின் தற்போதைய அணுகல் மற்றும் அவர்கள் பெறும் நேரங்கள் மாறாது.
எவ்வாறு விண்ணப்பிப்பது:
தகுதிவாய்ந்த ஆசிரியர் ஒருவரால் வழங்கப்படும் அனைத்து மழலையர் திட்டங்களிலும் ஆரம்ப மழலையர் பள்ளி (ESK) கிடைக்கிறது. உங்களுக்கு அருகிலுள்ள மழலையர் பள்ளியைத் தொடர்புகொண்டு, மழலையர் பள்ளியின் முன்கூட்டிய ஆரம்ப மழலையர் பள்ளி (ESK) மானியத்தை அணுக வேண்டுமெனக் கேட்டு, உங்கள் குழந்தையைச் சேர்க்க நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் மொழியில் உங்களுக்கு உதவிட இலவச மொழிபெயர்ப்பு சேவையைக் குழந்தைகள் சேவைகள் பெற முடியும்.
உதவி பெறுவதற்குக் கல்வித் திணைக்களத்தைச் சார்ந்த மூன்று-வயதினருக்கான மழலையர் பள்ளி விசாரணை அழைப்பை 1800 338 663 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது உங்கள் உள்ளூராட்சி மன்றத்தையோ நீங்கள் தொடர்பு கொள்ளலாம். உங்கள் மொழியில் உதவி பெற்றிட, தேசிய மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை 131 450 என்ற எண்ணில் நீங்கள் அழைத்து, உங்கள் உள்ளூராட்சி மன்றத்தின் எண்ணை அல்லது கல்வித் திணைக்களத்தின் எண்ணை அழைக்குமாறு மொழிபெயர்த்துரைப்பாளரிடம் கேளுங்கள், அதன்பின் மொழிபெயர்த்துரைப்பாளர் தொலைபேசி அழைப்பிலேயே மொழிபெயர்த்துச் சொல்லுவார்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்:
குழந்தைகள் அமைப்பில் கலந்துகொள்ள பதிவுசெய்யப்பட்ட வருடத்தில் ஏப்ரல் 30 -ஆம் தேதிக்கு முன் மூன்று வயதை எட்டிய குழந்தைகள், முன்கூட்டிய ஆரம்ப மழலையர் பள்ளிக்குத் (ESK) தகுதியுடையவர்களாவர். ‘எப்போது பதிவு செய்ய வேண்டும்’ என்பதைப் பார்க்கவும்.
உங்கள் குழந்தை ஐந்து அல்லது ஆறு வயதை எட்டும்போது பள்ளிக்குச் செல்லலாமா என்பதை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். அதன் பின், அவர்கள் மூன்று அல்லது நான்கு வயதில் ஆரம்ப மழலையர் பள்ளியை (ESK) அணுகலாம்.
ஆரம்ப மழலையர் பள்ளிக்கு (ESK) உங்கள் குழந்தை எப்போது தகுதி பெறுகிறது என்பதைக் கண்டறிவதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் கல்வித் திணைக்களம், உங்கள் உள்ளூராட்சி மன்றம், உங்கள் பிரசவம் பார்த்த, குழந்தை சுகாதாரச் செவிலியர் அல்லது உங்கள் பகுதியில் உள்ள ஒரு மழலையர் திட்டம் அல்லது உங்கள் பகுதியில் உள்ள பின்வரும் அமைப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
- மூன்று வயதினருக்கான மழலையர் பள்ளி விசாரணை இணைப்பு எண் 1800 338 663
- 'செயின்ட் லாரன்ஸ்' சகோதரத்துவம் (Brotherhood of St Laurence) 03 9483 1183
- அறக்கட்டளை இல்லம் (Foundation House) 03 9389 8900
- எஃப்.கே.ஏ. குழந்தைகள் சேவைகள் (Fka Children’s Services) 03 9428 4471
- VICSEG புதிய எதிர்காலங்கள் (VICSEG New Futures) 03 9383 2533
Updated