தோட்டப்பள்ளி ஒன்றை அடையாளம் காண விக்டோரியக் குடும்பங்களுக்கு உதவுவதற்காக விக்டோரிய மாநில அரசாங்கமானது புதியதொரு சின்னத்தைக் கொண்டுள்ளது. இச் சின்னம் Kinder Tick என்று அழைக்கப்படும்.
தோட்டப்பள்ளி அல்லது முன்-குழந்தைப்பருவக் கல்வி சேவைகள் கிடைக்கும் கட்டிடம் ஒன்றிற்குள் நீங்கள் வரும்பொழுது இச் சின்னத்தினை நீங்கள் காண்பீர்கள். அவர்களது வலைத்தலத்திலும் நீங்கள் இந்த சின்னத்தைக் காணக்கூடும்.
குழந்தைகளின் கல்விக்கு இந்த தோட்டப்பள்ளி சேவைகள் உண்மையில் இன்றியமையாதவையாகும்.
இந்த Kinder Tick சின்னமானது பின் வருவதைப் போல் தோன்றும்.
விக்டோரிய மாநில அரசினால் இந்த சேவைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதை இந்த அடையாளச் சின்னம் குறிக்கும்.
விளையாட்டுகளின் மூலமாக உங்களுடைய குழந்தைகள் தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து பயில்வர்.
உதாரணத்திற்கு, மொழி, எண்கள் மற்றும் வடிவ-அமைப்புகள் ஆகியவற்றைப் பற்றிக் குழந்தைகள் கற்பார்கள். நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளவும், பொருட்களை மற்றவர்களோடு
பகிர்ந்துகொள்ளவும், விடயங்களைச் செவிமடுத்துக் கேட்கவும் அவர்கள் கற்பார்கள். பாடசாலைக் கல்விக்கு ஆயத்தமாவதற்கு உதவும் மற்ற திறன்களையும் அவர்கள் பெறுவார்கள்.
2022-ஆம் ஆண்டிலிருந்து, பாடசாலைக் கல்வியைத் துவங்குவதற்கு முன்பாக இரண்டு ஆண்டுகளுக்கான தோட்டப்பள்ளிக் கல்வியை விக்டோரிய மாநிலக் குழந்தைகள் பெறலாம்.
தோட்டப்பள்ளிக் கல்வியானது குழந்தை பராமரிப்பு சேவையின் ஒரு பகுதியாக அமையலாம். தனியானதொரு கல்வித் திட்டமாகவும் இது இருக்கலாம்.
உங்களுடைய சமூகத்தில் Kinder Tick சின்னம் எங்கிருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்கு மேலதிகத் தகவல்கள் தேவைப்பட்டால், தோட்டப்பள்ளியிலுள்ள ஆசிரியர்களுடன் பேசுங்கள்.
Updated